சேலம்: சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், குழந்தைகள் தின விழா விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்-தது. கலெக்டர் பிருந்தாதேவி கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருவள்ளுவர் சிலை, பழைய பஸ் ஸ்டாண்ட், மாநக-ராட்சி அலுவலகம் வழியே சென்று, மீண்டும் கலெக்டர் அலுவல-கத்தில் நிறைவுபெற்றது. பின் குழந்தைகள் உரிமை, பாதுகாப்பு குறித்த வீதி நாடகம் நடத்தப்பட்டது. முன்னதாக, குழந்தைகள் தின விழிப்புணர்வு உறுதிமொழியை, கலெக்டர் வாசிக்க, அனை-வரும் ஏற்றுக்கொண்டனர். இதில் கல்லுாரி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், மருத்துவம், போலீஸ், சமூக நலத்துறை பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் திட்ட பணியாளர்கள், சுய உதவி குழுவினர் பங்கேற்-றனர். இதுகுறித்து, பிருந்தாதேவி கூறுகையில், ''நவ., 14ல் தேசிய குழந்தைகள் தினம், வரும், 19ல் குழந்தைகளுக்கு எதிரான உலக வன்கொடுமைகள் தடுப்பு தினம், 20ல் சர்வதேச குழந்தைகள் தினம் என, முப்பெரும் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்-வலம் நடத்தப்பட்டது,'' என்றார்.நீதிபதிகள் பங்கேற்புமல்லியக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவில், ஆத்துார் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ரவிச்-சந்திரன், சார்பு நீதிபதி கணேசன், மாணவ, மாணவியருக்கு, சட்ட விழிப்புணர்வு, உயர்கல்வி அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். ஆத்துார் வக்கீல் சங்க நிர்வாகிகள், மல்லியக்கரை போலீசார், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.