உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு அதிகாரிகளை மிரட்டியகுடும்பத்தினர் மீது புகார்

அரசு அதிகாரிகளை மிரட்டியகுடும்பத்தினர் மீது புகார்

ஓமலுார்,அரசு அதிகாரிகள் மீது, மண்ணெண்ணையை ஊற்றி கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்த குடும்பத்தினர் மீது, வருவாய் ஆய்வாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்,காடையாம்பட்டி தாலுகா கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில், குண்டூர் காளியம்மன் கோவில் அப்பகுதியை சேர்ந்த காளியப்பன் என்பவரது பட்டா நிலத்தில் உள்ளது. அவர் கோவில் பூசாரியாக இருந்தார். ஊர்மக்களுக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, 10 ஆண்டுக்கு முன் கோவிலை பூட்டி, வருவாய் துறையினர் சீல் வைத்தனர். தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி பேச்சுவார்த்தைக்கு பலமுறை பொதுமக்கள் வந்த நிலையில், பூசாரி காளியப்பன் பங்கேற்கவில்லை. இதனால் வேறு இடத்தில் மக்கள் கோவில் கட்டியுள்ளனர். பூட்டியுள்ள கோவிலில் உள்ள சுவாமி சிலை, புறப்பாடு வாகனங்களை எடுத்து தர காடையாம்பட்டி தாசில்தாரிடம் மக்கள் முறையிட்டனர்.இந்நிலையில், நேற்று தீவட்டிப்பட்டி போலீசார் பாதுகாப்புடன், செம்மாண்டப்பட்டி ஆர்.ஐ.,பாலாஜி தலைமையில் வருவாய் துறையினர் சிலைகளை எடுக்க சென்ற போது, காளியப்பன் குடும்பத்தினர் தடுத்து தீக்குளிப்பதாக மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு, மேலும் தடுக்க வந்த அரசு அதிகாரிகள் மீது ஊற்றி கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதையடுத்து, சிலைகளை ஊர் மக்கள் புதிய கோவிலுக்கு எடுத்து சென்று வழிபாடு செய்தனர். அதிகாரிகள் மீது மண்ணெண்ணையை ஊற்றி மிரட்டல் விடுத்த நபர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, செம்மாண்டப்பட்டி ஆர்.ஐ., பாலாஜி, தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை