உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2 மாதங்களில் 80 ஆடுகள் பலி இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

2 மாதங்களில் 80 ஆடுகள் பலி இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

சேலம்: இந்து இறை தொண்டர் சங்க மாநில தலைவர் மாரியப்பன் தலை-மையில் நிர்வாகிகள் நேற்று, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:தாரமங்கலம் ஒன்றியத்தில் கலர்காடு, செட்டிக்காடு, அருவங்-காடு, தொப்பலாம்பட்டி, வனிச்சம்பட்டி, துட்டம்பட்டி உள்பட சுற்றுப்புற கிராமங்களில், ஆடு வளர்ப்பு தொழிலில் ஏராளமான விவசாயிகள் ஈடுபடுகின்றனர். கடந்த இரு மாதங்களில், 80க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. இதுதொடர்பாக புகார் அளித்தும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்ப-டவில்லை. வெள்ளாளபுரம் ஏரியில் கொட்டப்படும் இறைச்சி கழிவை உட்கொள்ள, இரவில் கூட்டமாக வரும் நாய்களால், ஆடுகள் பதம் பார்க்கப்படுகின்றன. இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண்பதோடு, இழப்பீடு வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை