உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோடை விழாவுக்கு துறை வாரியாக பணி: அறிக்கை சமர்ப்பிக்க கலெக்டர் அறிவுரை

கோடை விழாவுக்கு துறை வாரியாக பணி: அறிக்கை சமர்ப்பிக்க கலெக்டர் அறிவுரை

ஏற்காடு : ஏற்காட்டில் மே மாதம், கோடைவிழா, மலர் கண்காட்சி நடத்தப்படும். அதன்படி, 47வது மலர் கண்காட்சி நடத்த, தோட்டக்கலை துறை வசம் உள்ள அண்ணா, ஏரி, தாவரவியல் பூங்காக்கள், ரோஜா தோட்டத்தில், 10,000க்கும் மேற்பட்ட, பல்வேறு ரக பூச்செடிகளை தொட்டிகளில் தயார்படுத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்று, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அனைத்து துறை அதிகாரிகளுடன், ஏற்காட்டில் ஆய்வு செய்தார். அதில் வழக்கமாக கலைநிகழ்ச்சி நடக்க உள்ள ஒன்றிய கலையரங்கம்; அனைத்து அரசு துறைகளின் செயல்பாடுகளை விவரிக்கும்படி, 'ஸ்டால்'கள் அமைக்கப்படும் இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து மலர் கண்காட்சி நடக்க உள்ள அண்ணா பூங்காவை பார்வையிட்டார். அப்போது பூங்காவில் பராமரிப்பின்றி இருந்த இடங்களை சுட்டிக்காட்டி அந்த இடங்களை சரியான முறையில் பராமரிக்க, துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மலர் கண்காட்சிக்கு செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடுகளை பார்வையிட்டார். அங்கு அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அதில் ஒவ்வொரு துறையினரும் கோடை விழா, மலர் கண்காட்சியில் என்ன செய்யப்போகிறார்கள் என கேட்டறிந்தார். தொடர்ந்து துறை சார்பில் செய்யப்போகும் பணி விபரங்களை அறிக்கையாக, விரைவில் சமர்ப்பிக்க, துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். கூடுதல் கலெக்டர் அலர்மேல் மங்கை, டி.ஆர்.ஓ., மேனகா, அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

சுற்றிப்பார்க்க சிறப்பு பஸ்

சுற்றுலா பயணியர், சேலத்தில் இருந்து பஸ்சில் ஏற்காடு வந்து, மலர் கண்காட்சி உள்பட பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு அதே வாகனத்தில் சேலம் செல்லும்படி, உணவுடன் கூடிய சிறப்பு சுற்றுலா பஸ் இயக்க, போக்குவரத்துத்துறையினருக்கு கலெக்டர் ஆலோசனை வழங்கினார். காலையில் சேலத்தில் இருந்து ஏற்காடு வந்து மாலையில் திரும்பி செல்லும்படி இருக்கவும் அறிவுறுத்தினார். அத்துடன் அந்த பயணியருக்கு ஏற்காட்டில் உள்ள பூங்கா நுழைவு கட்டணத்தில் சலுகை வழங்கலாம் என்றும் ஆலோசனை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி