மேலும் செய்திகள்
பாரதியார் பிறந்தநாள் கொண்டாட்டம்
3 minutes ago
அறங்காவலர் குழு பொறுப்பேற்பு
3 minutes ago
ஒருக்காமலையில் கலெக்டர் தரிசனம்
4 minutes ago
எக்கட்டாம்பாளையத்தில் பொங்கல் விழா ஜோர்
5 minutes ago
தாரமங்கலம்: தாரமங்கலம் ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடந்தது. பா.ம.க.,வை சேர்ந்த, தலைவி சுமதி தலைமை வகித்தார். அதில் தி.மு.க.,வை சேர்ந்த, துணைத்தலைவர் சீனிவாசன் பேசியதாவது:ஒன்றியத்தில், 2020 முதல், 2023 வரை பொது நிதி எவ்வளவு வந்துள்ளது? அதில் ஒவ்வொரு ஊராட்சிக்கு ஒதுக்கிய நிதி, ஆண்டு வாரியாக செலவினத்தை பட்டியலிட்டு கவுன்சிலர்களுக்கு வழங்க வேண்டும். 15வது மானிய நிதி குழுவில் ஒன்றியம், ஊராட்சிக்கு ஒதுக்கிய நிதி விபரத்தை தெரிவிக்க வேண்டும். கடந்த கூட்டத்தில், மன்ற பொருள் எண்: 770ல் நிறைவடைந்த நிலையில், தற்போது, 773ல் தொடங்குகிறது. 3 தீர்மானங்களை, தலைவி, அதிகாரிகள் சேர்ந்து நிறைவேற்றியுள்ளனர். இதற்கு பதில் அளித்த பின், கூட்டத்தை நடத்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதையடுத்து பி.டி.ஓ., முருகன் பேசுகையில், ''4 ஆண்டுகளில் பெறப்பட்ட பொது நிதி, செலவு விபரங்களை, 20 நாளில் கவுன்சிலர்களுக்கு வழங்கப்படும். தீர்மான நோட்டில் குளறுபடி நடப்பதாக, துணைத்தலைவர் கூறுகிறார். அந்த தீர்மானத்தில் அனைவரும் கையொப்பமிட்டுள்ளனர்,'' என்றார்.பின், தி.மு.க.,வை சேர்ந்த, 5 கவுன்சிலர்கள், தீர்மானத்தில் கையொப்பமிடவில்லை. இருப்பினும் பெரும்பான்மை கவுன்சிலர்கள் உள்ளதால், 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
3 minutes ago
3 minutes ago
4 minutes ago
5 minutes ago