உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கல்வி தான் உயர்வுக்கான ஆயுதம் கலைத்திருவிழாவில் அமைச்சர் பேச்சு

கல்வி தான் உயர்வுக்கான ஆயுதம் கலைத்திருவிழாவில் அமைச்சர் பேச்சு

ஓமலுார்,பள்ளி கல்வித்துறை சார்பில், மாநில அளவில் கலைத்திருவிழா, இரு நாள் போட்டி நேற்று முன்தினம் ஓமலுார் அருகே பத்மவாணி கல்லுாரியில் தொடங்கியது. முதல் நாளில் அரசு பள்ளிகளில் இருந்து, 2,875 மாணவ மாணவியர், 34 வகை போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தினர். நேற்று அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, 2,263 மாணவ, மாணவியருக்கு போட்டி நடந்தது.சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்து பேசுகையில், ''வெற்றி பெறும் மாணவருக்கு, 'கலையரசன்' விருது, மாணவியருக்கு 'கலையரசி' விருது வழங்கப்படும். வெற்றி பெறும் மாணவர்களின் தரவரிசை அடிப்படையில், முதல், 20 பேர், வெளிநாடு கல்விச்சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவர். மாணவச்செல்வங்களே, கல்விதான் உயர்வுக்கான ஆயுதம். அரசு பள்ளி, பெருமையின் அடையாளமாக திகழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.கலெக்டர் பிருந்தாதேவி, சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி