உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விம்ஸில் கண் பூங்கா திறப்பு

விம்ஸில் கண் பூங்கா திறப்பு

சேலம்,:உலக கண் ஒளியியல் தினத்தையொட்டி, சேலம், சீரகாபாடி விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ெஹல்த் சயின்ஸ் துறையின், கண் ஒளியியல் பிரிவு, பல்கலை வேந்தர் கணேசனின் வழிகாட்டுதல்படி, கண் பார்வை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், கண் பூங்காவை, கல்லுாரி வளாகத்தில் நிறுவியது.இதை, துறையை சேர்ந்த கண் ஒளியியல் பிரிவு மாணவ, மாணவியர், பல்வேறு கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கருவிகளை உருவாக்கி நிறுவியிருந்தனர். இன்றைய டிஜிட்டல் உலகில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பார்வையை ஆரோக்கியத்துடன் வைக்கவும், மேம்படுத்தும் நோக்கிலும் இதை உருவாக்கி இருந்தனர். இந்த பூங்காவை, துறை டீன் செந்தில்குமார் திறந்து வைத்தார்.மேலும் கண் சின்னத்துடன் கூடிய நீரூற்றை, மாணவர்களே, கல்லுாரி வளாகத்தில் வடிவமைத்தனர். இதையும் டீன் திறந்து வைத்தார். தொடர்ந்து துறையின் இதர பிரிவு மாணவர்கள், கண் பூங்காவை பார்வையிட்டு விழிப்புணர்வு அடைந்தனர். இதற்கான ஏற்பாட்டை, கண் ஒளியியல் பிரிவு பொறுப்பாளர் தமிழ்சுடர், உதவி பேராசிரியர்கள் சவுந்தர்யா, மெய்பிரபு, ராம்பிரசாத், திவ்யா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை