உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொழிலாளியை தாக்கிய தந்தை, மகன் கைது

தொழிலாளியை தாக்கிய தந்தை, மகன் கைது

மேட்டூர், மேட்டூர், செக்கானுார், ஜெ.ஜெ., நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி சுரேஷ்குமார், 37. இவரது மனைவி சந்தோஷ்குமரி, 28. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். சந்தோஷ்குமரி, 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, சுரேஷ்குமார் வீடு அருகே உள்ள கம்பத்தில், தெருவிளக்கு எரியவில்லை.அதன் இணைப்பு உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு அதே பகுதியை சேர்ந்த பெயின்டர்களான, ஜீவா, 22, அவரது தம்பி ராகுல், 25, 'பியூஸ்' கேரியரை பிடுங்கி வைத்தது தெரிந்தது. அவர்களிடம் சுரேஷ்குமார், பியூஸ் கேரியரை பொருத்துங்கள் என கூறிவிட்டு, வீட்டுக்கு சென்றார். சிறிது நேரத்தில் அங்கு சென்ற சகோதரர்கள், சந்தோஷ்குமரியை திட்டி கத்தியால் தாக்க முயன்றனர். தடுத்த சுரேஷ்குமாரின் கையில், காயம் ஏற்பட்டது. அப்போது அங்கு காரில், ஜீவா, ராகுலின் தந்தையான ரியல் எஸ்டேட் உரிமையாளர் கார்த்தி, 45, சென்றார். அவர், 'துப்பாக்கியால் சுட்டு கொல்லுங்கள்' என, மகன்களிடம் கூறினார். மக்கள் கூட, மூவரும் காரில் தப்பினர். சுரேஷ்குமார், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சந்தோஷ்குமரி புகார்படி, மேட்டூர் போலீசார் விசாரித்து, கார்த்தி, ஜீவாவை நேற்று கைது செய்து ராகுலை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை