உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆதிபராசக்தி கோவிலில் தங்கத்தாலி மாயம்

ஆதிபராசக்தி கோவிலில் தங்கத்தாலி மாயம்

தாரமங்கலம், தாரமங்கலம், கரிய பெருமாள் கோவில் அடிவாரத்தை சேர்ந்தவர் சரஸ்வதி, 60. இவர் அதே பகுதியில் ஆதிபராசக்தி கோவில் அமைத்து பூஜை செய்து வந்தார். சுவாமிக்கு, 10 கிராமில் தங்க தாலி அணிவிக்கப்பட்டிருந்தது. கடந்த, 4 பவுர்ணமியில் சுவாமிக்கு பூஜை செய்தபோது தாலி இருந்தது. நேற்று முன்தினம் அமாவாசையில் பூஜை செய்தபோது, தாலி இல்லை. சரஸ்வதி புகார்படி தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்