உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கஞ்சா விற்ற 3 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்

கஞ்சா விற்ற 3 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்

சேலம், சேலம், கிச்சிப்பாளையம், களரம்பட்டி அம்மா உணவகம் அருகே, கடந்த அக்., 14ல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, தாதகாப்பட்டி, அம்மன் நகரை சேர்ந்த கார்த்திக், 28, சாரதி, 23, குகை, பஞ்சந்தாங்கி ஏரி ஜீவானந்தம், 21, ஆகியோரை, கிச்சிபாளையம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம், 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது, விசாரணையில் தெரியவந்தது. இதனால், 3 பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கமிஷனர் அனில்குமார் கிரி, நேற்று உத்தரவிட்டார். அதன்படி, 3 பேர் மீதும் குண்டாஸ் பாய்ந்தது. அதில் கார்த்திக், சாரதி ஏற்கனவே இருமுறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை