| ADDED : டிச 10, 2025 11:07 AM
சங்ககிரி: மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் கிழக்குக்கரை கால்வாய், கிளை வாய்க்கால் தண்ணீர் மூலம், தேவூர் சுற்றுவட்டார பகுதி-களில் உள்ள விவசாயிகள், 3,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், நெல் சாகுபடி செய்துள்ளனர். ஆனால் அப்பகுதியில் ஒரு மாதமாக சாரல் மழை பெய்த-தோடு, பனிப்பொழிவும் ஏற்பட்டதால், நெற்பயிர்களில் ஆனைக்கொம்பன் ஈ, இலை சுருட்டுப்புழு தாக்-குதல் பாதிப்புக்கு வாய்ப்பு இருந்தது.இதனால் சேலம் வேளாண் துணை இயக்குனர் கமலம், சந்தியூர் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் ரவி, சங்ககிரி வேளாண் உதவி இயக்குனர் விமலா(பொ) உள்-ளிட்ட அதிகாரிகள், நேற்று சோழக்கவுண்டனுார், மேட்டுப்பாளையம், புள்ளாகவுண்டம்பட்டி உள்-ளிட்ட பகுதிகளில் நெல் வயல்களை பார்வையிட்டனர். அப்போது பருவ நிலை காலங்களில் நெற்பயிரில் ஏற்படும் நோய் தாக்கத்திலிருந்து எவ்வாறு பாது-காத்துக்கொள்வது, அதிக மகசூல் பெறுவது குறித்து, விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கினர்.