சேலம் : சேலம், சாஸ்தா நகர் ஐயப்பா ஆசிரமத்தில், வரும், 16ல் கேரள முறைப்படி கும்பாபிேஷகம் நடக்க உள்ளதால், பக்தர்கள் பங்கேற்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.இதுகுறித்து சாஸ்தா நகர் ஐயப்பா ஆசிரம தலைவர் நடராஜன், செயலர் சண்முகம், பொருளாளர் சரவண பெருமாள், சட்ட ஆலோசகர் அய்யப்பமணி ஆகியோர், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:ஐயப்பா ஆசிரமத்தில், 2000, 2012ல் கும்பாபி ேஷகத்தை தொடர்ந்து, 3ம் முறையாக வரும், 16ல் கும்பாபி ேஷகம் நடக்க உள்ளது. ஆலய தந்திரி பரமேஸ்வரன் நம்பூதிரிபாட்டால், கேரள முறைப்படி கும்பாபி ேஷகம் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு கடந்த, 11ல் யாக பூஜை, ேஹாமம் தொடங்கி நடந்து வருகிறது. மார்ச், 16 காலை, 8:00 மணிக்கு ஐயப்பன் பிரதிஷ்டா பூஜை, தொடர்ந்து ஐயப்பன் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கு மகா கும்பாபி ேஷகம் நடக்க உள்ளது. மார்ச் 14ல்(இன்று), கர்நாடகா பாடகி சுசித்ரா பாலசுப்ரமணியத்தின் இன்னிசை கச்சேரி, 16ல் வீரமணி ராஜூ பக்தி பாடல், 17ல் மணிகண்டனின் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.துணைத்தலைவர் பாலசுப்ரமணியம், இணை செயலர்கள் சிவக்குமார், சீனிவாசன், டிரஸ்டிகள் ராஜபிரியா, ரவிச்சந்திரன், ரவி சுப்பிரமணியம், ஆறுமுகசாமி, சின்னக்கவுண்டர், மீனாட்சி சுந்தரம், மக்கள் தொடர்பு அதிகாரி ராமச்சந்திரன், வக்கீல் குணசேகரன் உள்பட பலர் உடனிருந்தனர்.