உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் /  பெண்ணிடம் சில்மிஷம் லாரி டிரைவர் சிக்கினார்

 பெண்ணிடம் சில்மிஷம் லாரி டிரைவர் சிக்கினார்

பனமரத்துப்பட்டி: வீட்டில் தனியே இருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அடுத்த கம்மாளப்பட்டியைச் சேர்ந்தவர், 26 வயது பெண்; பெற்றோருடன் குடிசை வீட்டில் வசிக்கிறார். நேற்று முன்தினம், பெற்றோர் பூ பறிக்கும் கூலி வேலைக்கு சென்ற நிலையில், அப்பெண் வீட்டில் தனியே இருந்தார். மதியம் 1:00 மணிக்கு மது போதையில் இருந்த கம்மாளப்பட்டி, எட்டிக்குட்டையைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் மகிழன், 25, வீட்டில் தனியே இருந்த பெண்ணை நோட்டம் விட்டார். திடீரென வீட்டிற்குள் புகுந்த அவர், அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, பெண்ணை காப்பாற்றினர். தொடர்ந்து, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மகிழனை, நேற்று போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை