சேலம்: சேலம், சூரமங்கலம் போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து, நேற்று காலை, ரயில்வே ஸ்டேஷனின், 4வது நடைமேடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர், பையுடன் நின்றிருந்தார். போலீசார் சந்தேகம் அடைந்து, அவரிடம் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பேசினார்.பையை சோதனை செய்தபோது, இரு பிளாஸ்டிக் கவரில், தலா ஒவ்வொரு கிலோவில், 'ஹாஷிஸ்' எனும் போதை பொருள் இருப்பது தெரிந்தது. உடனே அவரை ஸ்டேஷனுக்கு அழைத்துச்-சென்று, முறையாக விசாரித்ததில், கேரள மாநிலம் எர்ணாகுளம், திருக்காரா வடக்கு பகுதியை சேர்ந்த சர்புதீன், 24, என்பதும், அவர் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து போதை பொருளை வாங்கி, கேரள மாநிலத்துக்கு கடத்த முயன்றதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், போதை பொருளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு, 25 லட்சம் ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர்.350 கிலோ புகையிலைஇளம்பிள்ளை, பாட்டப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் நித்-யானந்த பாபு, 32. இவர் சேலம், 4 ரோட்டில் புகையிலை பொருட்களை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பதாக, செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நேற்று அங்கு சென்று, போலீசார் சோதனை நடத்தியபோது, அவ-ரது, 'ரெனால்ட் டிரைபர்' காரில், 350 கிலோவில், ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன.அப்பொருட்களை, காருடன் பறிமுதல் செய்த போலீசார், நித்யா-னந்தபாபுவை கைது செய்தனர்.