உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மோட்டார் திருட்டு சகோதரர்கள் சிக்கினர்

மோட்டார் திருட்டு சகோதரர்கள் சிக்கினர்

ஆத்துார், ஆத்துார் அருகே சீலியம்பட்டியை சேர்ந்தவர் அண்ணாதுரை, 52. ஆத்துார் ரயிலடி தெருவில், மோட்டார் பழுதுபார்ப்பு கடை வைத்துள்ளார். இரு வாரங்களுக்கு முன், ஆத்துார், அழகாபுரத்தை சேர்ந்த சிவபெருமாள், 20,000 ரூபாய் மதிப்பில், 7.5 ெஹச்.பி., மின்மோட்டாரை பழுதுபார்க்க, அண்ணாதுரையிடம் கொடுத்தார். அவர், மோட்டாரை கடந்த, 26ல் கடை வெளியே வைத்துவிட்டு சென்ற நிலையில் காணவில்லை. அண்ணாதுரை புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் விசாரித்ததில், முல்லைவாடி, புது காலனியை சேர்ந்த, சகோதரர்கள் பாரதி, 27, பார்த்திபன், 24, திருடியது தெரிந்தது. அவர்களை, நேற்று போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை