உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாளை பட்டர்பிளை பாலத்தில் மின்பாதை பணி: மாற்றுப்பாதையில் வாகனங்களை இயக்க அறிவுரை

நாளை பட்டர்பிளை பாலத்தில் மின்பாதை பணி: மாற்றுப்பாதையில் வாகனங்களை இயக்க அறிவுரை

சேலம்: சேலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க, புதிதாக நிறுவப்பட்டு வரும் மெய்யனுார் துணை மின் நிலையத்தில், தற்போது மின்பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு சேலம் - கே.ஆர்.தோப்பூர் வரை செல்லும் மின்பாதையில் இருந்து எடுக்கப்பட்டு, மெய்யனுார் துணை மின்நிலையத்துக்கு உள்வெளி இரட்டைச்சுற்று மின்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.அதனால் நாளை காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை, கந்தம்பட்டி பைபாஸ் அருகே, தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் உள்ள மின் கோபுரத்தை இணைக்கும் மின்பாதை பணி நடக்க உள்ளது. அப்போது மின்கம்பிகளை, நெடுஞ்சாலை குறுக்கே கடத்தும் போது, அந்த வழியே செல்லும் வாகனங்களை தற்காலிக நிறுத்தம் செய்து, மின்கம்பிகள் கடத்திய பின் அனுமதிக்கப்படும்.அதுவரை, கந்தம்பட்டி - கொண்டலாம்பட்டி பட்டர்பிளை பாலத்தில் செல்லும் வாகனங்கள், மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும். அதேபோல் மறுமார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள், ஈரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், மாற்றுப்பாதையிலோ அல்லது 10 - 15 நிமிடங்கள் காத்திருந்து நெடுஞ்சாலை குறுக்கே, மின்கம்பி கடத்திய பின் செல்லலாம். இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க, மின்தொடர் கட்டுமான செயற்பொறியாளர் புஷ்பராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை