உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 180 பஸ்களில் 17ல் குறைபாடு

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 180 பஸ்களில் 17ல் குறைபாடு

சேலம்:சேலம், உடையாப்பட்டியில், தனியார் பள்ளி பஸ்களுக்கு சிறப்பு ஆய்வு முகாம் நேற்று நடந்தது. அதில், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதை கலெக்டர் பிருந்தாதேவி பார்வையிட்ட பின் கூறியதாவது: மாவட்டத்தில், 335 தனியார் பள்ளிகளில் இயங்கி வரும், 2,123 பஸ்களுக்கான ஆய்வு தொடங்கி, வரும், 15 வரை நடக்கிறது. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட, 180 பஸ்களில், 17 பஸ்களில் சிறு குறைபாடு இருந்தது. இதை சரிசெய்து மீண்டும் சோதனைக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.அனைத்து பாதுகாப்பு வசதிகளும், 100 சதவீதம் சரியாக இருக்கும்பட்சத்தில் மட்டும் சான்றிதழ் வழங்கப்படும். கட்டமைப்புகளில் குறைபாடு இருப்பின் சரிசெய்துவர கால அவகாசம் அளிக்கப்படும். மோசமான நிலையில் உள்ள வாகனங்களின் தகுதி சான்றிதழ் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.ஆர்.டி.ஓ., அம்பாயிரநாதன், உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !