உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கள்ளக்குறிச்சியில் பிரேமலதா போட்டியிட கட்சியினர் கோரிக்கை

கள்ளக்குறிச்சியில் பிரேமலதா போட்டியிட கட்சியினர் கோரிக்கை

ஆத்துார் : தே.மு.தி.க.,வின், சேலம் புறநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம், ஆத்துாரில் நேற்று நடந்தது. மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்தார். அதில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறுதல்; கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா அல்லது விஜயபிரபாகரன் போட்டியிடுதல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, நகர, ஒன்றிய நிர்வாகிகளிடம், கூட்டணி குறித்து கருத்து கேட்கப்பட்டது.தொடர்ந்து இளங்கோவன், 'தே.மு.தி.க., கூட்டத்துக்கு வரும்போது பேன்ட் அணிந்து கட்சியினர் வரக்கூடாது. கட்சி வேட்டி அணிந்து பங்கேற்க வேண்டும்' என அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை