உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பிரதமர், முதல்வர் படங்களை அகற்றுங்க!

பிரதமர், முதல்வர் படங்களை அகற்றுங்க!

தொடர்ந்து அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிருந்தாதேவி பேசியதாவது:துறை சார்ந்த எந்த நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடாது. குறிப்பாக எந்த முகாமும் நடத்தக்கூடாது. அனைத்து கட்சிகளையும் சமமாக பார்க்க வேண்டும். முன் தேதியிட்டு, எந்த உதவிகளும் வழங்க வேண்டாம். நம்மை சுற்றி கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக எந்த வளர்ச்சி திட்ட பணிகளையும் தொடங்க வேண்டாம். அவசரம்; அவசியம் கருதி, குடிநீர் பணி என்றாலும் கூட, என் கவனத்துக்கு கொண்டு வந்து ஆணைய ஒப்புதல் பெற்று செயல்படுத்தப்படும். அரசு வாகனத்தை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தவிர, மற்றவர் பயன்படுத்த வேண்டாம். அதனால் அரசு வாகனத்தை உடனே சுத்தம் செய்து விடுங்கள். அரசு வளர்ச்சிப்பணி; திட்டம்; அறிவிப்பு தொடர்பான எந்த கையேடு, குறிப்பேடு வாகனத்தில் இருக்கக்கூடாது. அரசு அலுவலகத்தில் அரசியல் சார்ந்த படம், காலண்டர், நலத்திட்ட ஸ்டிக்கர், பிரதமர், முதல்வர், அமைச்சர் படம் ஆகியவற்றை உடனே அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை