உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி காவிரி கல்வி நிறுவனங்களில் குடியரசு தினம் கோலாகலம்

தி காவிரி கல்வி நிறுவனங்களில் குடியரசு தினம் கோலாகலம்

மேச்சேரி: சேலம், மேச்சேரியில் உள்ள தி காவிரி கல்வி நிறுவனங்கள் சார்பில், 75வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் ரேவதி இளங்கோவன் தலைமை வகித்தனர். செயல் அலுவலர் கருப்பண்ணன், தேசியக்கொடியை ஏற்றினார். தொடர்ந்து மாணவ, மாணவியருக்கு இனிப்புகளை வழங்கினர்.கவுரவ தலைவர் நடேசன், தலைவர் அன்பழகன், செயலர் இளங்கோவன், துணை தலைவர் மதன்கார்த்திக், தாளாளர் ராமநாதன், செயல் இயக்குனர் கருப்பண்ணன், முதன்மை செயல் அலுவலர் சண்முகநாதன், கல்லுாரி முதல்வர்களான, தி காவிரி பொறியியல் துரைசாமி, கலை, அறிவியல் செல்வக்குமார், கல்வியியல் ஜோகி, பிஸியோதெரபி வெங்கடசுப்ரமணியம், நர்சிங் அமுதா, இன்ஸ்டியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ் தைரியசீலன், துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர். நிறைவாக தி காவிரி பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் நந்தகுமார் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை