உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அமாவாசையன்று மனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் திட்டம்

அமாவாசையன்று மனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் திட்டம்

மேட்டூர்: செப்டம்பர் 27ம் தேதி அமாவாசை நாளில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த 22ம் தேதி துவங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு செப்டம்பர் 29ம் தேதி கடைசி நாள். வேட்புமனு தாக்கல் தேதி அறிவிக்கப்பட்டு ஐந்து நாட்கள் ஆகிய நிலையில், இன்னும் சில கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. ஆளுங்கட்சியான அ.தி.மு.க., மேயர், நகராட்சி, டவுன்பஞ்., தலைவர், மாவட்ட ஊராட்சி குழு, ஒன்றிய குழு உறுப்பினருக்காக வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து விட்டது. ஒருவருடைய ஜாதகத்தில், சூரியன் நல்ல இடத்தில் அமர்ந்தால் மட்டுமே அவர்களால் பதவி, அதிகாரம், அரசியல் செல்வாக்கு ஆகியவற்றை கைப்பற்ற முடியும். அதனால் செப்டம்பர் 27ம் தேதி அமாவாசை நாளில், மாலை 6.16 வரை உத்திர நட்சத்திரம் உள்ளது. எனவே, சூரியனின் நட்சத்திரமான உத்திர நட்சத்திர நாளில் மனு தாக்கல் செய்தால், அரசியலில் பதவி, அதிகாரம் ஆகியவற்றை கைப்பற்ற முடியும் என, வேட்பாளர்கள் நம்புகின்றனர். எனவே, செப்டம்பர் 27ம் தேதி காலை 9 முதல் 10.30 மணி வரை எமகண்டம் என்பதால், 10.30 மணிக்கு மேல் மாலை 3 மணி வரை வேட்பாளர்கள் பலர் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். அ.தி.மு.க., வேட்பாளர்கள் பெரும்பாலோர் அன்று மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை