உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கூட்டுறவு வார விழாவில் கருத்தரங்கு

கூட்டுறவு வார விழாவில் கருத்தரங்கு

சேலம், எழுபத்தி இரண்டாவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி, சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண் நிலையத்தில் நேற்று முன்தினம் கருத்தரங்கு நடந்தது. மேலாண் நிலைய துணை பதிவாளர் தஸ்திகீர் வரவேற்றார். ஓய்வு பெற்ற துணை பதிவாளர் தெவிட்டாமணி தலைமை வகித்து நடுவராக செயல்பட்டார்.'சமுதாய முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிப்பது கூட்டுறவு கடன் சங்கங்களே, கடன் சார்பற்ற சங்கங்களே' தலைப்பில், 25க்கும் மேற்பட்ட இரு பிரிவினர், கருத்துகளை எடுத்துரைத்தனர். இறுதியில் கூட்டுறவு கடன் சங்கங்கள், கடன் சார்பற்ற சங்கங்கள் ஆகிய இரண்டும் கூட்டுறவின் இணைந்த கைகள் போன்றது என, தீர்ப்பு அளிக்கப்பட்டது. இக்கருத்தரங்கில் சங்ககிரி துணை பதிவாளர் சந்தியாஸ்ரீ, ஆத்துார் நகர கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளர்/செயலாட்சியர் பூர்விசா, துணை பதிவாளர் கவிதா(பயிற்சி), கூட்டுறவு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்