உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கார் மோதி விபத்து தெலுங்கானா பக்தர் பலி

கார் மோதி விபத்து தெலுங்கானா பக்தர் பலி

ஓமலுார், தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் மாவட்டத்தில் இருந்து, நாயக் என்ற குருசாமி தலைமையில், 385 பேர், அய்யப்ப மாலை அணிந்து, கடந்த அக்., 24ல், கேரள மாநிலம் சபரிமலைக்கு நடைபயணத்தை தொடங்கினர். நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை கடந்து, குதிரைகுத்தி பள்ளம் அருகே வந்தபோது, தர்மபுரியிலிருந்து சேலம் நோக்கி அதிவேகமாக வந்த, 'டாடா அல்ட்ராஸ்' கார், நடைபயணமாக சென்ற ஹரிபிரசாத், 48, மீது மோதியது. படுகாயம் அடைந்த அவரை, சக பக்தர்கள் மீட்டு, ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அன்று இரவு அவர் உயிரிழந்தார். தீவட்டிப்பட்டி போலீசார், காரை விட்டு தப்பி ஓடிய டிரைவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை