உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாநில அரசின் உரிமைகளை மீட்கவே மாநாடு: அமைச்சர் உதயநிதி பளிச் பேட்டி

மாநில அரசின் உரிமைகளை மீட்கவே மாநாடு: அமைச்சர் உதயநிதி பளிச் பேட்டி

சேலம்: ''மத்திய அரசால் பறிக்கப்பட்ட, மாநில அரசின் உரிமைகளை மீட்கும்படி, தி.மு.க., இளைஞர் அணி சார்பில், மிகப்பெரிய மாநாடு நடக்கிறது,'' என, அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில், தி.மு.க., இளைஞரணி மாநில மாநாடு இன்று நடக்கிறது. இதன் இறுதிக்கட்டப்பணியை, அமைச்சர் உதயநிதி நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசால் பறிக்கப்பட்ட, மாநில அரசின் உரிமைகளை மீட்கும்படி, தி.மு.க., இளைஞர் அணி சார்பில், மிகப்பெரிய மாநாடு நடக்கிறது. நம் கல்வி உரிமைகளை, மத்திய பா.ஜ., அரசு பறித்து, 'நீட்' தேர்வை புகுத்தியதால், அனிதாவை நாம் இழந்தோம். சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவரையும் இழந்தோம். இந்த இருவரது நினைவாக, தி.மு.க., இளைஞரணி மாநாட்டின் வாயில்களுக்கு, அவர்களது பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. நாம் இழந்துவிட்ட கல்வி உரிமையை மீட்டு, 'நீட்' தேர்வை ரத்து செய்ய, மத்தியில் ஆட்சியில் இருக்கும், பா.ஜ., அரசை அகற்றுவதே ஒரே தீர்வாக இருக்கும்.மாநாடு ஏற்பாடும், தேர்தல் ஒருங்கிணைப்பின் ஒரு பணி தான் என்றும், மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய பின், லோக்சபா தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளையும், முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை