உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போதை தமிழகத்தை மாற்ற அ.தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போடுங்கள்

போதை தமிழகத்தை மாற்ற அ.தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போடுங்கள்

ஓமலுார், : சேலம் லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் விக்னேஷ், அஸ்தம்பட்டி பகுதி - 1, 2ல் நேற்று, இரட்டை இலைக்கு ஓட்டு சேகரித்தார். அவருக்கு ஆதரவாக, சேலம் மாநகர மாவட்ட செயலர் வெங்கடாஜலம், கோரிமேட்டில் பிரசாரம் செய்து பேசியதாவது:இ.பி.எஸ்., மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட வேட்பாளர் விக்னேஷ் இளம் வாலிபர். அவரை அதிகப்படியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.இ.பி.எஸ்., ஆட்சியில், 900 ரூபாய் இருந்த மணல், தற்போது, 5,000 ரூபாயாக உயர்ந்துவிட்டது. அரிசி, பருப்பு விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி, நில வரி உயர்வு ஏற்பட்டுள்ளது. இ.பி.எஸ்., ஆட்சியில் பொங்கல் பண்டிகைக்கு, 2,500 ரூபாய் வழங்கப்பட்டது. ஸ்டாலின் ஆட்சியில், 1,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை கூட, இ.பி.எஸ்., போராடியதால் வழங்கப்பட்டது. அதிலும் பலருக்கு கிடைக்கவில்லை.தி.மு.க., அரசு, 'நீட்' தேர்வு, கல்வி கடன், நகை கடன், விவசாய கடன் ஆகிய எல்லாவற்றையும் ரத்து செய்கிறேன் என கூறியும் ஒன்றும் செய்யவில்லை. ஸ்டாலின் ஆட்சியில், போதை பொருள் விற்பனையால், தமிழகத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி, தற்போது போதை தமிழகமாக மாறிவிட்டது. தமிழகம் மாற வேண்டும் என்றால் அனைவரும், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தொகுதி பொறுப்பாளர் சிங்காரம், முன்னாள் எம்.எல்.ஏ., செல்வராஜ், மாநகர அவைத்தலைவர் பன்னீர்செல்வம், அஸ்தம்பட்டி பகுதி செயலர்கள் சரவணன், முருகன், மகளிர் அணி செயலர் ஜமுனாராணி, தே.மு.தி.க., மாவட்ட செயலர் ராதாகிருஷ்ணன், கட்சி நிர்வாகிள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை