உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வெளிநாடுகளில் வசிக்கும் வாக்காளர்கள் ஆன்லைனில் எஸ்.ஐ.ஆர்., சமர்ப்பிக்கலாம்

வெளிநாடுகளில் வசிக்கும் வாக்காளர்கள் ஆன்லைனில் எஸ்.ஐ.ஆர்., சமர்ப்பிக்கலாம்

சேலம், வெளி மாநிலம், நாடுகளில் வசிக்கும், சேலம் மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்கள், ஆன்லைனில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடக்கிறது. டிச., 4க்குள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து கணக்கீட்டு படிவங்களும் முழுமையாக பூர்த்தி செய்து திரும்பப்பெற வேண்டும் என, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.படிவங்களை பூர்த்தி செய்வதில் எழும் சந்தேகங்களை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர், வி.ஏ.ஓ., நகராட்சி, டவுன் பஞ்சாயத்து, மாநகராட்சி, தாசில்தார், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், நேரில் சென்று கேட்டு தெரிந்துகொண்டு பூர்த்தி செய்யலாம். தவிர மாவட்டம் முழுதும் உள்ள வாக்காளர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தீவிர திருத்த மையத்தை, 1950 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.வேலை நிமித்தமாக வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் வசிக்கும் வாக்காளர்கள், voters.eci.gov.inஎன்ற இணைய தள முகவரியில் படிவத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து, டிச., 4க்குள் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம். வாக்காளர்கள் அனைவரும் தாமதமின்றி, இப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை