உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உழவர்சந்தையில் பெண் சாலை மறியல் விவசாயிகள் எச்சரிக்கையால் வாபஸ்

உழவர்சந்தையில் பெண் சாலை மறியல் விவசாயிகள் எச்சரிக்கையால் வாபஸ்

ஆத்துார்: கெங்கவல்லி அருகே கூடமலையை சேர்ந்தவர் மஞ்சுளா, 39. ஆத்துார் உழவர் சந்தையில் காய்கறி விற்கிறார். சில நாட்களுக்கு முன், அவர் கொண்டு வரும் காய்கறி சரியாக இல்லை என, வேளாண் அலுவலர்கள் கூறினர். இதனால் தமிழக வேளாண் கமி-ஷனருக்கு, மஞ்சுளா புகார் அனுப்பினார்.இதுதொடர்பாக சேலம் வேளாண் வணிக துணை இயக்குனர் சுஜிதா, நேற்று முன்தினம் விசாரித்தபோது, மஞ்சுளாவுக்கு எதி-ராக பல விவசாயிகள் குற்றம்சாட்டினர்.இந்நிலையில் மஞ்சுளா, வெளியே இருந்து அவரது ஆதரவாளர்-களை அழைத்துக்கொண்டு, நேற்று காலை, 7:00 மணிக்கு சந்-தைக்கு வந்தார். தொடர்ந்து வேளாண் அலுவலர்களை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்டார்.அங்குள்ள விவசாயிகள் சிலர், 'மஞ்சுளா, பழைய காய்கறி விற்-கிறார். சந்தைக்கு வரும் மக்களிடம் பிரச்னை செய்கிறார். இவரால் மற்ற விவசாயிகளுக்கு கெட்டப்பெயர் ஏற்படுகிறது. மஞ்சுளா மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில், விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் செய்வோம்' என்றனர். இதையடுத்து மஞ்சுளா, மறியலை கைவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ