உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குறைந்தழுத்த மின்சாரம் 3 கிராம மக்கள் அவதி

குறைந்தழுத்த மின்சாரம் 3 கிராம மக்கள் அவதி

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே குறைந்தழுத்த மின்சப்ளையால் 3 கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.இவ்வொன்றியத்தில் ஒடுவன்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, முட்டாக்கட்டி ஆகிய கிராமங்களில் கடந்த 15 நாட்களாக குறைந்தழுத்த மின்சாரமே வருகிறது. இதனால் வீடு, கடைகளில் மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகின்றன. சில இடங்களில் மின்விளக்குகள் எரிவதில்லை. மேலும் பல மணி நேரம் மின்தடையும் ஏற்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறைந்தழுத்த மின்சப்ளையை சரிசெய்து தடையில்லா மின்சாரம் வழங்க 3 கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை