உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரயில்வே கேட்டில் பரப்பிய ஜல்லிக்கற்களால் விபத்து

ரயில்வே கேட்டில் பரப்பிய ஜல்லிக்கற்களால் விபத்து

மானாமதுரை: மானாமதுரை ரயில்வே கேட்டில் ஜல்லிக்கற்களை பரப்பி சரி செய்யாததால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மானாமதுரையிலிருந்து மதுரை செல்லும் ரயில்வே லைனில் பைபாஸ் ரயில்வே கேட் அமைந்துள்ளது.இந்த ரயில்வே கேட் வழியாக மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து சிவகங்கை,மதுரை, இளையான்குடி,தாயமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. மானாமதுரை கீழ்கரை பகுதியிலிருந்தும் ஏராளமானோர் வாகனங்களில் இந்த ரயில்வே கேட்டை கடந்து மேல்கரைக்கு செல்கின்றனர்.3 நாட்களுக்கும்மேலாக ரயில்வே கேட் பகுதியில் ஜல்லிக்கற்களை பரப்பி அப்படியே விடப்பட்டுள்ளதால் மக்கள் நடந்து கூட செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ரயில்வே நிர்வாகம் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
ஜூன் 16, 2024 09:37

அட பசங்களா... ரயில்கள் செல்லுவதற்கு தகுந்த சப்போர்ட் ஹெவை. அதனால்தான் பெரிய ஜல்லிகள் கொட்டப்படுகின்றன . நீங்கள் நடப்பதற்கு அல்ல.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை