உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேவகோட்டையில் அ.தி.மு.க., பிரசாரம்

தேவகோட்டையில் அ.தி.மு.க., பிரசாரம்

தேவகோட்டை, : தேவகோட்டையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில், மாவட்ட மாணவர் அணி செயலாளர் நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் முன்னிலையில் சிவகங்கை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சேவியர்தாஸ் பிரசாரம் செய்தார். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிர்லா கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம், நகர செயலாளர் ராமச்சந்திரன், நகராட்சி துணை தலைவர் ரமேஷ், நிர்வாகிகள் கார்த்திகேயன், துரைராஜ், அய்யப்பன், முத்துராமலிங்கம், வக்கீல் பாஸ்கரன், உட்பட கவுன்சிலர்கள், வட்ட செயலாளர்கள் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.வேட்பாளர் சேவியர்தாஸ் பேசுகையில், 40 ஆண்டு எம்.பி., யாக, அமைச்சராக இருந்த சிதம்பரமும் , மகன் கார்த்தியும் ஒன்றும் செய்யவில்லை. தற்போது பல இடங்களில் என்ன செய்தீர்கள் என மக்கள் கேட்க துவங்கி விட்டனர். அவர்கள் இங்கு வரும் போது என்ன செய்தீர்கள் என கேளுங்கள். என்னை வெற்றி பெற செய்தால் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர முடியும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ