மேலும் செய்திகள்
இளைஞருக்கு கத்திக்குத்து
1 minutes ago
சென்னை ரயில்களில் கூட்டம் அதிகரிப்பு
2 minutes ago
வட்டார விளையாட்டு போட்டி
5 minutes ago
இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை..
5 minutes ago
காரைக்குடி: சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடந்தது.சேர்மன் சரண்யா தலைமையேற்றார். பி.டி.ஓ., க்கள் சுந்தரம் மற்றும் ராஜேஷ் முன்னிலை வகித்தனர். அதிகாரிகள் கூறுகையில், சாக்கோட்டை ஒன்றியத்தில் 15வது நிதி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 14 ஆயிரம் மதிப்பீட்டில், பேவர் பிளாக், தார்ச்சாலை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு வேலி அமைத்தல் உட்பட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது. நீர்த்தேக்க தொட்டிகளில் கழிவு கலப்பதை தடுக்கும் பொருட்டு ரூ.30 ஆயிரம் செலவில் வேலி அமைக்கும் பணி நடைபெற உள்ளது என்றனர். ராமச்சந்திரன் 1வது வார்டு: பல கிராமங்களில் குளியல்தொட்டி அமைப்பதற்கு தொடர்ந்து மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கூடுதலாக குளியல் தொட்டிக்கு நிதி ஒதுக்க வேண்டும். மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வீணாகி வரும் வீல் சேர்களை முதியோர் இல்லம்மற்றும் மருத்துவமனைகளில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் கூறுகையில், 15வது நிதி குழு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது. எந்தெந்த ஊராட்சிக்கு என்ன தேவையோ அது அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெறும். வீல் சேர்கள் தேர்தலின் போது நடக்க முடியாதவர்களை அழைத்துச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்டது.சுப்பிரமணி 5வது வார்டு: சங்கராபுரம் ஊராட்சியில் தூய்மைப் பணிகள் நடைபெறுவதில் தொய்வு ஏற்பட்டு வருகிறது. குப்பை வாங்கும் வண்டிகள் குறைவாக உள்ளது. ஊராட்சியில் பிளான் அப்ரூவல் பணி மட்டுமே நடைபெறுகிறது. மக்களின் அடிப்படை பிரச்னை தீர்க்கப்படுவதில்லை. அதிகாரிகள் கூறுகையில், சங்கராபுரம் ஊராட்சி தனி அலுவலரின் அதிகாரத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த ஊராட்சியில் புகார் வந்த சில மணி நேரங்களிலேயே பிரச்னை சரி செய்யப்படுகிறது. தூய்மை பணிக்காக கூடுதல் வண்டிகள் வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.
1 minutes ago
2 minutes ago
5 minutes ago
5 minutes ago