உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வியாபாரியிடம் வழிப்பறி மேலும் ஒருவர் கைது

வியாபாரியிடம் வழிப்பறி மேலும் ஒருவர் கைது

காரைக்குடி: காரைக்குடி சுந்தரம் செட்டியார் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் சரவணன் 41. நகை வியாபாரியான இவர், மே 21ம் தேதி சென்னையில் இருந்து 75 பவுன் தங்க நகை மற்றும் 7 கிலோ வெள்ளியுடன் பஸ்சில் வந்துள்ளார். காரைக்குடி ஐந்து விளக்கு அருகே 2 பைக்கில் வந்த 5 நபர்கள் தாக்கி நகைகளை பறித்துச் சென்றனர். இந்த வழக்கில் சாந்தகுமாரை போலீசார் கைது செய்த நிலையில், சென்னையில் இருந்த சிவகங்கையைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் பால்பாண்டி 26 என்பவரை கைது செய்துள்ளனர். 2 அரிவாள் மற்றும் 750 கிராம் வெள்ளி கட்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்