உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சட்டசபை தொகுதி வாரியாக ஓட்டு இயந்திரங்கள் அனுப்புவது துவக்கம்

சட்டசபை தொகுதி வாரியாக ஓட்டு இயந்திரங்கள் அனுப்புவது துவக்கம்

சிவகங்கை: சிவகங்கையில் இருந்து 4 சட்டசபை தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நேற்று துவங்கியது.சிவகங்கை லோக்சபா தொகுதியில் உள்ள சிவகங்கை, மானாமதுரை (தனி), திருப்புத்துார், காரைக்குடி ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் 1,357 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஓட்டுச் சாவடிக்கென தலா ஒரு ஓட்டுப்பதிவு, கட்டுப்பாட்டு, ஓட்டு உறுதிதன்மை இயந்திரங்கள் வீதம் ஒதுக்கப்பட உள்ளன.இது தவிர தனியாக தலா 1,628 ஓட்டுப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 1,764 ஓட்டு உறுதி தன்மை இயந்திரங்கள் கையிருப்பில் உள்ளன. நேற்று இந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கான சீரமைத்தல் பணி கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது.மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், கலெக்டர் பி.ஏ.,(பொது) முத்துக்கழுவன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சிவகங்கை விஜயகுமார், காரைக்குடி பால்துரை, மானாமதுரை (தனி) ஜெயமணி, திருப்புத்துார் சரவண பெருமாள், கட்சி சார்பில் பா.ஜ., மாவட்ட துணை தலைவர் சுகனேஸ்வரி, ஆம் ஆத்மி மாவட்ட செயலாளர் பி.ராமு, காங்., நகர் தலைவர் விஜயகுமார், தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து, அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் தேவதாஸ், மார்க்சிஸ்ட் மாவட்ட குழு மெய்யப்பன், இந்திய கம்யூ., நகர் கமிட்டி உறுப்பினர் குஞ்சரம் பங்கேற்றனர்.பின்னர் ஓட்டுப்பதிவு இயந்திர கோடவுனில் இருந்து அந்தந்த சட்டசபை தொகுதிக்கான ஓட்டுப்பதிவு, கட்டுப்பாடு, ஓட்டு உறுதி தன்மை இயந்திரங்கள் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு, தாசில்தார் அலுவலக பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன.இதில், கலெக்டர் பி.ஏ., (தேர்தல்) ஜான்சன் சகாயம், தேர்தல் தாசில்தார் மேசியதாஸ், தாசில்தார்கள் சிவராமன், ராஜா, தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை