உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கால்வாயில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து

கால்வாயில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து

திருப்புவனம் : திருப்புவனம் புதுார் அருகே பிரமனுார் கால்வாயில் நள்ளிரவில் ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.வைகை ஆற்றின் வலது பிரதான கால்வாய் மூலம் பிரமனுார் கண்மாய்க்கு வரத்து கால்வாய் திருப்புவனம் வழியாக செல்கிறது. திருப்புவனம் புதுார் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு வேகமாக வந்த ஆட்டோ ஒன்று கால்வாயில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.திருப்புவனம் போலீசார் மீட்க சென்ற போது ஆட்டோவில் வந்தவர்கள் காயத்துடன் சென்று விட்டனர். போலீசார் ஆட்டோவில் வந்தவர்கள் யார் என விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ