உள்ளூர் செய்திகள்

செயின் பறிப்பு

காரைக்குடி: காரைக்குடியைச் சேர்ந்தவர் முனியாண்டி மனைவி பத்மா 44. இவர் திருமயம் அருகே உள்ள பள்ளி ஒன்றில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் திருச்சி - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தார். இவரது பின்னால் பைக்கில் வந்த இருவர், பத்மா அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.கடியாபட்டியை சேர்ந்த பாண்டித்துரை மனைவி கவிதா 41, அரசு மருத்துவமனை பின்புறம் இருசக்கர வாகனத்தில் வந்த போது பின்னால் பைக்கில் வந்த இருவர் கவிதா அணிந்திருந்த 4 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர்.செட்டிநாடு,குன்றக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை