உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்; மாணவர்கள் பங்கேற்க ஏற்பாடு

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்; மாணவர்கள் பங்கேற்க ஏற்பாடு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் செப்டம்பர், அக்டோபரில் நடக்க உள்ள முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் அதிக மாணவர்களை பங்கேற்க செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி செப்., மற்றும் அக்., மாதங்களில் நடைபெற உள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுப்பிரிவினர், மாற்றுத்திறனாளி, பொதுப்பிரிவு என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளாக பிரித்து மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்பட உள்ளன. முதற் கட்டமாக மாவட்ட அளவிலான போட்டி செப்.,ல் சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் துவங்க உள்ளது.இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ஆக.,25க்குள் www.sdat.tn.gov.inஎன்ற இணைய தளத்தில் வீரர்களின் தனி, குழு போட்டிக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் போலீஸ், நகராட்சி, விளையாட்டு, மருத்துவ துறை உட்பட 11 விதமான குழுவை ஏற்படுத்தியுள்ளனர்.

ஆலோசனை கூட்டம்

இது தொடர்பாக சிவகங்கையில் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான போட்டியில் அதிகளவில் மாணவர்கள், பொதுப் பிரிவினர்களை பங்கேற்க செய்ய வேண்டும் என முடிவு செய்தனர்.மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் பள்ளிகளின் தாளாளர், தனித்தனி விளையாட்டு போட்டி செயலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை