| ADDED : ஆக 07, 2024 06:38 AM
சிவகங்கை : விருதுநகர் கலெக்டரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்புவனத்தில் வட்டார தலைவர் காசிவிஸ்வநாதன், சிவகங்கையில் வட்டார செயலாளர் ரமேஷ், கண்ணங்குடியில் வட்டார தலைவர் முருகேசன், மானாமதுரையில் வட்டார செயலாளர் ராஜேஸ்வரன், திருப்புத்துாரில் வட்டார செயலாளர் சின்னையா. சாக்கோட்டையில் வட்டார துணை தலைவர் சரவணன், காளையார்கோவிலில் பாலசங்கர், சிங்கம்புணரியில் மாவட்ட செயற்குழு சேக் அப்துல்லா, இளையான்குடியில் வட்டார செயலாளர் பழனி, சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் மாநில செயற்குழு உறுப்பினர் பயாஸ் அகமது, எஸ்.புதுாரில் வட்டார செயலாளர் ராம்பிரசாத் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டத்தில் மாவட்ட தலைவர் வேலுச்சாமி, செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பெரியசாமி, மாவட்ட துணை தலைவர்கள் லுாயிஸ் ஜோசப் பிரகாஷ் பங்கேற்றனர்.