உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தொழிலாளியின் இல்ல விழாவுக்குசிங்கப்பூரில் இருந்து வந்த முதலாளி

தொழிலாளியின் இல்ல விழாவுக்குசிங்கப்பூரில் இருந்து வந்த முதலாளி

சிவகங்கை: காளையார்கோவில் அருகே தொழிலாளியின் இல்ல விழாவில் பங்கேற்க சிங்கப்பூரில் இருந்து வந்த முதலாளியை குதிரை வண்டியில் அழைத்து சென்றனர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே வலையம்பட்டியைச் சேர்ந்தவர்கள் ஆனந்த் - மெர்லின் தம்பதி. ஆனந்த் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது தனது இரு மகன்களுக்கு புதுநன்மை அளித்தல் விழா எடுத்தார். இதற்காக வலையம்பட்டி புனித செபஸ்தியார் சர்ச்சில் விழா நடத்தினர். இதில் பங்கேற்க சிங்கப்பூர் முதலாளி கென்கோங்--யினுக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி வலையம்பட்டி வந்த முதலாளியை குதிரை வண்டியில் சர்ச்சிற்கு அழைத்து சென்று மரியாதை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை