உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குப்பை எரிப்பு: புகையால் மக்கள் அவதி; சிவகங்கையில் குப்பை எரிப்பு புகையால் பொதுமக்கள் அவதி

குப்பை எரிப்பு: புகையால் மக்கள் அவதி; சிவகங்கையில் குப்பை எரிப்பு புகையால் பொதுமக்கள் அவதி

சிவகங்கை : சிவகங்கை நகராட்சி 15வது வார்டில் குப்பையை கொட்டி எரிப்பதால் அதில் வரும் புகை மூலம் அப்பகுதி மக்கள் அவதிப்படுவதாக தெரிவிக்கின்றனர்.சிவகங்கை நகர் 15வது வார்டில் உள்ளது அம்பேத்கர் தெரு. இந்த பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நகராட்சியில் சேகரிக்கும் குப்பையை இந்த பகுதியில் உள்ள சாவக்கட்டு ஊருணியில் கொட்டுகின்றனர். குப்பை அதிகமாக சேர்ந்து விட்டால் தீ வைத்து கொளுத்துகின்றனர். இதனால் இந்த பகுதி முழுவதும் புகை பரவி இப்பகுதியில் உள்ளவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.ஊருணிக்குள் கொட்டப்படும் குப்பையால் ஊருணி மேவி குப்பை காடாக மாறி வருகிறது. இதனால்மழைக்காலங்களில் ஊருணியில் தண்ணீர்சேகரிக்க முடியாத சூழல் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் சாவக்கட்டு ஊருணியில் கொட்டி உள்ள குப்பையை அப்புறப்படுத்தி மழைக்காலங்களில் ஊருணியில் தண்ணீர்சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ