உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரயில் மோதி சிறுமி பலி

ரயில் மோதி சிறுமி பலி

காரைக்குடி,- தேவகோட்டை ரஸ்தா ரயில்வே ஸ்டேஷன் அருகே சிறுமி ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்தது கோட்டையூரைச் சேர்ந்த 14 வயது சிறுமி என தெரிய வந்தது. மாணவி அமராவதிப்புதுாரில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியின் உடலை கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விடுதியில் தங்கி படித்த சிறுமி எவ்வாறு ரயில்வே ஸ்டேஷன் வந்தார். எப்படி ரயிலில் அடிபட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை