மேலும் செய்திகள்
விரைவு தபால் கட்டணம் உயர்வு
23 hour(s) ago
சிவகங்கையில் கஞ்சா கடத்தல் காருடன் அண்ணன், தம்பி கைது
23 hour(s) ago
குயிலி நினைவு தினம் அனுசரிப்பு
02-Oct-2025
இளம் செஞ்சிலுவை சங்க கூட்டம்
02-Oct-2025
மானாமதுரை: மானாமதுரை வாரச்சந்தையில் பச்சை மிளகாய் 1 கி ரூ. 180க்கும், தக்காளி ரூ.60 என விற்கப்படுகிறது. அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.மானாமதுரை வாரச்சந்தைக்கு மதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, இளையான்குடி, சிவகங்கை, பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து காய்கறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.மானாமதுரை மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.கடந்த சில வாரங்களாக விலை குறைந்திருந்த தக்காளி தற்போது ஒரு கிலோ ரூ.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று விலை குறைவாக இருந்த பச்சை மிளகாய் விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன பாகற்காய் ஒரு கிலோ ரூ.250க்கும், கத்தரிக்காய் 80க்கும், பட்டர் பீன்ஸ்,சோயா பீன்ஸ் கிலோ ரூ.240க்கும், உருளைக் கிழங்கு ரூ.60க்கும், அவரைக்காய் கிலோ ரூ.100 என விற்கப்படுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.காய்கறி வியாபாரிகள் கூறியதாவது: கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருவதால் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது.இதனால் அனைத்து காய்கறிகளின் விலையும் கூடியுள்ளது. வரும் வாரங்களில் விலை குறைய வாய்ப்புள்ளது என்றனர்.
23 hour(s) ago
23 hour(s) ago
02-Oct-2025
02-Oct-2025