உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் தேருக்கு சட்டம் பொருத்துதல்

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் தேருக்கு சட்டம் பொருத்துதல்

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் புதிதாக செய்யப்படும் தேரில் மேல் சட்டம் அமைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது.சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்திற்கு உட்பட்ட ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு சித்திரை திருவிழாவில் தேரோட்ட நிகழ்ச்சியின் போது சோமநாதர் பிரியாவிடையுடன் ஒரு தேரிலும், ஆனந்தவல்லி அம்மன் மற்றொரு தேரிலும் என இரண்டு தேர்களில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்று வந்தது.நாளடைவில் ஆனந்தவல்லி அம்மன் செல்லும் பெரிய தேர் சேதமடைந்ததை தொடர்ந்து கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆனந்தவல்லி அம்மன் சிறிய தேரில் எழுந்தருளி வருகிறார்.கடந்த 2 வருடங்களாக நன்கொடையாளர்களின் முயற்சியால் ஆனந்தவல்லி அம்மனுக்கு தனியாக ஒரு பெரிய தேர் செய்யும் பணி கோவில் வளாகத்தில் நடந்து வருகிறது.திருச்சியிலிருந்து சக்கரங்கள் கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று சக்கரத்தின் மேற்புறம் மரத்திலான புதிய சட்டங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. அர்ச்சகர்கள் ராஜேஷ்,குமார் பூஜை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை