உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஓ. சிறுவயல் சாலை சந்திப்பில் தொடர்ந்து விபத்து அதிகரிப்பு

ஓ. சிறுவயல் சாலை சந்திப்பில் தொடர்ந்து விபத்து அதிகரிப்பு

காரைக்குடி : காரைக்குடி அருகே திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் ஓ.சிறுவயல் நான்கு சாலை சந்திப்பில் தொடர் விபத்து ஏற்படுகிறது.காரைக்குடி நகரை ஒட்டி செல்லும் திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலையானது போக்குவரத்து நிறைந்த சாலையாக உள்ளது. காரைக்குடியை ஒட்டி, ஆவடைப்பொய்கை, சூரக்குடி, ஓ. சிறுவயல், மானகிரி என நான்கு இடங்களில் சந்திப்பு உள்ளது. மானகிரி தவிர மற்ற மூன்று இடங்களில் எந்தவொரு எச்சரிக்கை விளக்கோ ,பலகைகளோ, தடுப்புகளோ அமைக்கப்படவில்லை. ஆவுடைப்பொய்கை மற்றும் ஓ.சிறுவயல் சாலையில் தொடர் விபத்து ஏற்படுகிறது. உயிரிழப்புகளை தடுக்க மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி