உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வளர்ச்சி பணிக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து வெளிநடப்பு போராட்டம்

வளர்ச்சி பணிக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து வெளிநடப்பு போராட்டம்

சிவகங்கை ; காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்காமல், செலவின தீர்மானம் மட்டுமே கொண்டு வருவதை கண்டித்து தலைவர் ராஜேஸ்வரி (அ.தி.மு.க.,), துணை தலைவர் ராஜா (பா.ஜ.,) உட்பட 17 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் அ.தி.மு.க.,- தி.மு.க., - பா.ஜ., என பல்வேறு கட்சிகளை சேர்ந்த 19 கவுன்சிலர்கள் உள்ளனர். இக்கவுன்சிலின் சாதாரண கூட்டம் நடந்தது. தலைவர் ராஜேஸ்வரி (அ.தி.மு.க.,) தலைமை வகித்தார். துணை தலைவர் ராஜா (பா.ஜ.,) முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் உமாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) பழனியம்மாள், மேலாளர் எஸ்.கல்பனா உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். நேற்று மதியம் 12:20 மணிக்கு தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்கள் வந்தனர். கூட்டம் துவங்கிய சில நிமிடங்களிலேயே கூட்ட அரங்கை விட்டு வெளியேறுவதாக கூறி தலைவர், துணை தலைவர் உட்பட 17 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். கவுன்சில் கூட்ட தீர்மானத்தில் அலுவலக செலவினம், சம்பளம் என ரூ.87 லட்சத்திற்கு செலவினத்திற்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானமாக தான் உள்ளது. ஒன்றியத்தில்வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தேவையான பணிகள் குறித்து எந்த தீர்மானங்களும் இடம் பெறவில்லை. இதனை கண்டித்து கவுன்சில் கூட்டத்தை புறக்கணித்து, வெளிநடப்பு செய்வதாக கூறி சென்றனர். பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கவுன்சில் கூட்டம் நடைபெறாமல் ரத்தானது.

வளர்ச்சி பணிகளே இல்லை

தலைவர் ராஜேஸ்வரி (அ.தி.மு.க.,) கூறியதாவது:இக்கூட்டத்தில் ஒரு கவுன்சிலுக்கு ரூ.5 லட்சம் வரை பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு கோரினோம். ஆனால், ரூ.87 லட்சத்திற்கு செலவினம் சார்ந்த தீர்மானத்தை மட்டுமே வைத்துள்ளனர். மேலும், எந்தவித பணிகளும் இந்த ஒன்றியத்தில் நடைபெறவில்லை. 2021-2022ம் ஆண்டில் செய்த பணிகளுக்கு தற்போது செலவின கணக்கு காண்பித்துள்ளனர். இதை கண்டித்து தான் வெளிநடப்பு செய்தோம்.

நிதியில்லாததால்வெளிநடப்பு

வட்டார வளர்ச்சி அலுவலர் உமாராணி கூறியதாவது: இந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் துாய்மை பணியாளர், வேலை உறுதி திட்ட பணியாளர் என பல்வேறு ஊழியர்களின் 6 மாத சம்பள பாக்கி மற்றும் பிற அலுவலக செலவின தொகை ரூ.87 லட்சத்திற்கு ஒப்புதல் பெறவே தீர்மானத்தில் வைத்துள்ளோம். வளர்ச்சி பணிகளுக்கு நிதி இல்லாததால், தீர்மானம் தயாரிக்கவில்லை. நிதி இல்லை என்றதால் வெளிநடப்பு செய்து விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை