உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் அரசு பஸ்சில் புகை : பயணிகள் ஓட்டம்

சிவகங்கையில் அரசு பஸ்சில் புகை : பயணிகள் ஓட்டம்

சிவகங்கை : சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் நேற்று காலை 11:00 மணிக்கு மதுரையிலிருந்து தேவகோட்டைக்குச் செல்லும் பஸ் பயணிகளுடன் சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் வந்தது. பஸ்சை நிறுத்திய பிறகு இன்ஜினை ஆப் செய்ய டிரைவர் கிறிஸ்துதாஸ் முயன்றுள்ளார். பஸ் இன்ஜின் ஆப் ஆகாமல் கரும்பு புகை கிளம்பியுள்ளது. இதனால் அருகில் இருந்த பயணிகள் பதறி அடித்து ஓட்டம் பிடித்தனர். தீயணைப்புத் துறையினர் வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்ததும் பஸ் இன்ஜின் ஆப் ஆகி கரும்புகை நின்றது. இதனால் சிறிது நேரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.மேலாளர் கவியரசு கூறுகையில், பஸ் கியர் வேலை செய்யாததால் இன்ஜின் ஆப் ஆகாமல் ஆயில் உறியப்பட்டு புகை அதிகமாக வந்துள்ளது. இதனால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. உடனடியாக பஸ் பணிமனைக்கு எடுத்து வரப்பட்டு சரிசெய்யப்பட்டது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை