உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அதிகரிக்கும் வெயில் ஆட்டோவில் தென்னங்கிடுகு

அதிகரிக்கும் வெயில் ஆட்டோவில் தென்னங்கிடுகு

திருப்புவனம் : தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆட்டோ ஓட்டுனர்கள் பலரும் ஆட்டோவின் மேல் பகுதியை தென்னந்தட்டிகளால் கூரை அமைத்துள்ளனர்.கோடை வெயிலின் தாக்கம் ஏப்ரல் மாதத்திற்கு மேல்தான் தொடங்குவது வழக்கம், ஆனால் இந்தாண்டு பிப்ரவரி மாதமே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆறு மணிக்கே சூரிய உதயம் தொடங்கி மாலை ஆறரை மணிக்கு மேல்தான் அஸ்தமனம் நடைபெறுகிறது. காலை ஏழு மணிக்கு எல்லாம் வெயில் சுட்டெரிப்பதால் வெப்பம் தாங்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களிலும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்புவனம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வரும் நிலையில் வெயிலின் தாக்கத்தை தணிக்க சிலர் ஆட்டோவின் மேற்புறம் தென்னந்தட்டியை வைத்து கட்டியுள்ளனர். இதன் மூலம் ஓரளவிற்கு வெயிலின் தாக்கம் குறைந்து வருகிறது. மேலும் தென்னந்தட்டிகளின் மேல் தண்ணீரையும் தெளித்து விடுவதால் ஓரளவிற்கு குளிர்ச்சியும் ஏற்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை