உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மூதாட்டியை தாக்கியவர் கைது

மூதாட்டியை தாக்கியவர் கைது

சிவகங்கை: சிவகங்கை ஆவரங்காடு ஜான் மனைவி காந்திமதி 85. இவரது வீட்டில் இரண்டு பெண்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இவர்களை பார்ப்பதற்காக காளையார்கோவில் அருகே உள்ள காவணிக்கரை கிராமத்தை சேர்ந்த நவீன் குமார் 18 வந்து சென்றார். நேற்று முன்தினம் இவர்களை பார்க்க நவீன்குமார் வந்தார். அப்போது வீட்டின் உரிமையாளர் காந்திமதி நவீன்குமாரிடம்யார் என்று விசாரித்தார். அப்போது இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதில் நவீன்குமார் காந்திமதியை தாக்கியுள்ளார். காந்திமதி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரிமருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். காந்திமதியின் மருமகள் முத்து மீனாட்சி போலீசில் புகார் அளித்தார். நவீன்குமாரைபோலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி