உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / எஸ்.ஐ.,யை தாக்கிய வழக்கு மேலும் இருவர் கைது

எஸ்.ஐ.,யை தாக்கிய வழக்கு மேலும் இருவர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் கஞ்சா கடத்தலின்போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பிய நிதிஷ்குமார் 22, கண்ணன் 21 ஆகிய இருவரையும் இன்ஸ்பெக்டர் அன்னராஜா நேற்று கைது செய்தார்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கச்சநத்தம் சரவணமுருகன் மகன் அகிலன் 24, திருப்புவனம் புதுார் முருகன் மகன் நிதிஷ்குமார் 22, திருப்புவனம் பெருமாள் கோவில் தெரு நந்தகோபால் மகன் கண்ணன் 21, இவர்கள் மூவரும் ஆக.17 காலை 7:30 மணிக்கு காளையார்கோவில் அருகே ஒட்டாணம் பகுதியில் காரில் சென்றனர். அங்கு வாகன சோதனையில் ஈடுபட்ட காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் ஆடிவேல், எஸ்.ஐ., குகன், காரை மறித்து சோதனை செய்ததில், 22 கிலோ கஞ்சா வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.காரில் இருந்த அகிலன் மற்றும் அவரது நண்பர்கள் ஆயுதங்களால் எஸ்.ஐ., குகனை தாக்கிவிட்டு தப்பினர். அப்போது, இன்ஸ்பெக்டர் ஆடிவேல் சுட்டதில், அகிலன் காலில் காயமடைந்தார். அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பி சென்ற இருவரையும் தேடி வந்த நிலையில் மறவமங்கலம் அருகே நிதிஷ்குமார், கண்ணனை இன்ஸ்பெக்டர் அன்னராஜா கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை