உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நான்கு வழிச்சாலையில் அத்துமீறல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நான்கு வழிச்சாலையில் அத்துமீறல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்புவனம்: மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப்போக்குவரத்து நடந்து வருகிறது. மதுரை நகருக்கு அருகாமையில் இருப்பதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பலரும் டூவீலரில் நான்கு வழிச்சாலையில் பயணித்து அலைபேசி மூலம் செல்பி எடுப்பது, ரீல்ஸ் வீடியோ எடுப்பது என அத்து மீறுகின்றனர். டூவீலர்களில் நடுரோட்டில், சென்டர் மீடியனில் சாகசம் செய்கின்றனர். மாணவர்களுக்கு இணையாக மாணவிகளும் இந்த மோகத்தால் அத்து மீறுகின்றனர். அதிவேகமாக எதிர் திசையில் சரக்கு வாகனங்கள், பஸ்களின் மீது மோதுவது போல வந்து விலகுவது. மற்ற டூவீலர்கள் மீது மோதுவது போல வந்து விலகுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். நடுரோட்டில் டூவீலரில் அந்தரத்தில் சாகசம் செய்வது, தடுப்புச்சுவரில் டூவீலரை ஓட்டிச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.மணலுார் பாலம், சக்குடி விலக்கு, சிலைமான் பாலம் போன்ற இடங்களில் இவர்களின் அத்து மீறலால் மற்ற வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி