உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பராமரிப்பில்லாத தொழிற்பேட்டை 3000 ஏக்கர் நிலம், கட்டடம் விரயம் 

பராமரிப்பில்லாத தொழிற்பேட்டை 3000 ஏக்கர் நிலம், கட்டடம் விரயம் 

சிவகங்கை : காரைக்குடி சிட்கோ வளாகம் உரிய பராமரிப்பின்றி 3,000 ஏக்கர் பரப்பளவில் கட்டிய கட்டடங்கள் செயல்பாடின்றி முடங்கி கிடப்பதாக புகார் எழுந்துள்ளது.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் 3,000 ஏக்கர் பரப்பளவில் 'சிட்கோ' துவக்கப்பட்டது.இங்கு தொழில் துவங்கும் முதலீட்டாளர்களுக்கு, தொழில் துவங்க ஏதுவாக கட்டடங்கள் கட்டி கொடுத்தனர். ஆரம்பத்தில் 'ஜிப்' மற்றும் அட்டை கம்பெனி, ஸ்டீல் ஸ்குரூ தயாரிக்கும் கம்பெனி துவக்கப்பட்டன. தொடர்ந்து சிட்கோ நிர்வாகம் தொழில் முதலீட்டாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை. காலப்போக்கில் 3,000 ஏக்கரில் உள்ள தொழிற்பேட்டை வளாகம், பாழடைந்த கட்டடங்களாக காட்சி அளிக்கின்றன. சுய தொழிலில் ஈடுபட ஆர்வமுள்ள தொழில் முதலீட்டாளர்கள், உரிய வசதியின்றி 'சிட்கோ' வில் தொழில் துவங்கவே தயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசு, இளைஞர்கள் சுய தொழில் செய்ய முன்வருவதற்கான தகுதிகளை 'சிட்கோ' தொழிற்பேட்டைக்கு ஏற்படுத்தி தர வேண்டும்.

'சிட்கோ' வை சீரமைக்க மனு

காமராஜர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஏ.அருளானந்து கூறியதாவது, காரைக்குடி சிட்கோ தொழிற்பேட்டை துவக்கிய காலத்தில் ஏராளமான கம்பெனிகள் நிறுவி, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியது.தொடர்ந்து சிட்கோ நிர்வாகம் இந்த கம்பெனிகளை ஊக்கப்படுத்த முன்வரவில்லை. தொடர்ந்து மின்கட்டண உயர்வு, நிலத்தின் மதிப்பீடு விலை உயர்வால், தொழில் துவங்க யாரும் முன்வரவில்லை.இதனால், சிட்கோ தொழிற்கூட கட்டடங்கள் சிதிலமடைந்து கிடக்கிறது. இவற்றை சீரமைத்து, புதிதாக தொழில் துவங்க வாய்ப்பு தேடி வரும் இளைஞர்களுக்கு வழங்கி உதவுமாறு கலெக்டர் ஆஷா அஜித்திடம் மனு அளித்துள்ளேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை